April 1, 2021
தண்டோரா குழு
கோவை – நாகர்கோவில் ரயில், மதுரை – நாகர்கோவில் இடையே வரும் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதுரை அருகே திருமங்கலம்,துலுக்கப்பட்டி இடையே ரயில்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,கோவை – நாகர்கோவில் மார்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே கடந்த மார்ச் 21ம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மதுரை – நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில்,பராமரிப்பு பணிகள் முடிவடையாததால்,கோவை – நாகர்கோயில் அதிவிரைவு ரயில் மற்றும் நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயில் வரும் 13 ஆம் தேதி வரை நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதனால், 13 ஆம் தேதி வரை கோவை – நாகர்கோவில் ரயில், கோவை – மதுரை இடையே மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் – கோவை ரயில், மதுரை – கோவை இடையே மட்டுமே இயக்கப்படும்.
இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.