October 8, 2018
தண்டோரா குழு
கோவை நல்லாம்பாளையம் 44 வது வார்டு பகுதியில் தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை நல்லாம்பாளையம் 44 வது வார்டு பகுதியில் கூட்டு குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி ஒரு வருடமாக இந்த பகுதியில் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் செல்லும் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக இந்த பணியை முடித்து சாலை சீரமைப்பு செய்து மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் முடிக்க வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அம்மனுவில், கோவையில் கனமழை பெய்து வருவதால் இந்த பகுதியில் தண்ணீர் போகக்கூடிய நிலைமை இல்லாததால் நாங்கள் வசிக்கும் பகுதி வீடுகளிலும்
புகுந்துவிடுகிறது. தோண்டப்பட்ட குழி மூடாமல் இருப்பதால் மக்கள் விலக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்து மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பணிகளும் செய்து தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.