• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நகர் முழுவதும் செ.ம.வேலுச்சாமி பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு !

September 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட அதிமுகவின் மூத்த உறுப்பினராக இருப்பவர் செ.ம.வேலுச்சாமி. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருக்கும் அவர் அமைச்சராகவும், கோவை மாநகர மேயராகவும்,கட்சியின் மாவட்ட செயலாளராகவும் இருந்தவர்.

சமீப காலமாக அவருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை நகர் முழுவதும் செ.ம.வேலுச்சாமி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிறிய அளவிலான படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.

அதே வேளையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என கட்சியின்பெயரை குறிப்பிடாமல் முன்னாள் அமைச்சர், மேயர் என்று மட்டும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சுவரொட்டியில் அண்ணாவின் கொள்கைகளை தன்னலமில்லாமல் வழிநடத்துபவர் வழி நடப்போம் என வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் அதிமுகவின் சார்பில் கட்சி அலுவலகத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவிலும் செ.ம.வேலுச்சாமி பங்கேற்கவில்லை.அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகியான செ.ம.வேலுச்சாமி பெயரில், அதிமுக பெயரை தவிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க