March 20, 2021
தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் பேரூர் கோவிலிருந்து பிரச்சாரத்தை துவங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு எழுதிக்கொண்டார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுரேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.அப்போது கோவில் அருகே இருந்த கடை வியாபாரிகளை சந்தித்து, தொகுதியில் உள்ள குறைகளை பற்றி கேட்டறிந்தார்.
அப்போது அங்கிருந்த பூக்கடை வியாபாரி பெண்ணிடம் பேசிய போது,எங்கள் தொகுதியில் எந்த பிரச்சனையும் இல்லை மகிழ்ச்சியாக இருக்கிறோம் என கூறினார். இதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நீங்கள் பூக்கடை வைத்து நன்றாக தான் உள்ளீர்கள் ஆனால் நாட்டில் வேலையில்லாமல் இருப்பது உங்களுக்கு தெரியுமா என கேட்டார்.
பின்னர் பேரூர் கோவில் எதிரே குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து யார் இதை சுத்தம் செய்ய உத்தவிடும் அதிகாரி, வட்டம், மாவட்டம் எல்லாம் எங்கே என்றவாறு அங்கே படுத்திருந்த தெரு நாயிடம் நீ குப்பையை போட்டாய என பேசிக்கொண்டிருந்தார். பின் அவ்வழியாக வரும் பொதுமக்களிடமும் பெயர் விலாசம் மற்றும் தொகுதி குறைகளை எழுதி வைத்துக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் அங்கு வந்த சாமியர்களிடம் பேசினார். தொகுதிக்கு என்ன செய்வீர்கள் என கேட்ட போது உங்கள் தொகுதிக்கு நான் தேர்தெடுக்கப்பட்டால் தொண்டாமுத்தூரில் 10 லட்சம் தென்னை மரங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுப்பேன், நீட் தேர்வு வராமல் இருக்க நடவடிக்கை எடுப்பேன், வேளாண் மசோதாவை இல்லாமல் செய்வேன் என பேசினார்.