• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தொண்டாமுத்தூரில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி- மற்றொரு சிறுமி படுகாயம்!

March 25, 2022 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருகே பணியின் போது கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்தில் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்த்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே பாபு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.அப்போது பணியாளர்கள் வேலை செய்த போது, நேற்று கட்டி முடித்த சுவர் ஒன்று திடிரென சரிந்து விழுந்துள்ளது.இதில் சுவற்றின் அருகே விளையாடி கொண்டிருந்த சன்சிகா என்ற 4வயது,சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு சிறுமியான 7வயதான தேவசேனா உடலில் கம்பி குத்திய காயங்களுடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கட்டிடம் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க