March 10, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு வழங்க கூடாது என கோவையில் அம்மன் அர்ஜுனன் ஆதரவாளர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தொகுதியில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,கோவை மாவட்ட அதிமுக தலைமை அழுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியினை அதிமுகவிற்கு வழங்க வேண்டுமெனவும் கூட்டணி கட்சியினருக்கு வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தி எம்.எல்.ஏ அம்மன்அர்ஜூனன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.