• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம் !

March 15, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று விமானம் மூலம் கோவை வந்த அவர் பிற்பகல் 2.30 மணிக்கு கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியத்திடம் தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஜனநாயக கடமையினை கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கின்றது. என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான். எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம இருக்காது. எங்களின் திட்டத்தையும் செழுமையும் நம்பியே களமிறங்கி இருக்கின்றோம்.

கோவை மனதுக்கு இனிய ஊர்களில் ஒன்று. இங்கு தனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்.இந்த ஏற்றத்திற்கு காரணமானவர்கள் இங்கு இருக்கின்றனர் என்பதாலே இங்கு போட்டியிடுகிறேன்.இங்கே மத நல்லிணக்கம் இல்லாமல் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது.அதற்கு எதிரான குரலாக நாங்கள் இருப்போம் என தெரிவித்தார்.

மேலும்,கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற புகழ் மங்காமல் இருக்க பணிசெய்ய போவதாகவும் கோவை தெற்கு தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளது எனவும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றவர்கோவை மண்டலத்திற்கு தேவையான விமான விரிவாக்கம்,மெட்ரோ போன்றவை செய்யப்படாமல் இருக்கின்றது என குற்றம்சாட்டினார்.

முன்மாதிரி தொகுதியாக இந்த தொகுதியை மாற்ற முடியும்.out sider என என்னை யாரும் சொல்ல மாட்டார்கள். தான் தமிழன் எனவும் தனக்கு நண்பர்கள் உறவினர்கள் இங்கு இருக்கின்றனர் என கூறிய அவர் Out sider என்ற கேள்வி ஊடக ஊந்துதலாக கூட இருக்கலாம் என தெரிவித்தார்.இனி கோவையை மையமாக வைத்து கொண்டு பிரச்சாரம் இருக்கும் என தெரிவித்த அவர் அரசியல் எங்களுக்கு தொழிலல்ல அரசியல் எங்கள் கடமை என்றார்.

மேலும் படிக்க