March 12, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
அந்த வகையில்,கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன், தி.நகரில் பழ.கருப்பையா,மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா, ஆலந்தூர் தொகுதியில் நடிகர் ஆனந்த் பாபு ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.