October 29, 2020
தண்டோரா குழு
கோவையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் மிகவும் பழமையான இடியும் தருவாயில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க கோரி மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தெப்பகுளம் பகுதியில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை காரணமாக பூட்டி கிடந்த கட்டிடத்தின் மேல் பகுதி இன்று மாலை கட்டிடத்தின் மேல் கைப்பிடிச்சுவர் பலத்த ஓசையுடன் விழுந்து சேதமடைந்தது. இதனால் உட்பகுதியில் காங்கிரீட் தரையில் விழுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நூல்கள் சேதமடைந்தன.
அதிஷ்டவசமாக விடுமுறை காரணத்தால் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் திடீரென கட்டிடத்தின் கைப்பிடிச் சுவர் விழுந்து இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.