• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகுமா?

January 9, 2019

விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இதற்காக டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவா -அஜித் கூட்டணி 4 முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அஜித்தை திரையில் பார்க்க காத்திருக்கின்றனர். இதற்கிடையில், நாளை ரஜினியின் பேட்ட படமும் வெளியாகவுள்ளதால் திரையரங்குகள் திருவிழாக்கோலமாக காட்சியளிக்க உள்ளன.

ஆனால், தற்போது விஸ்வாசம் திரைப்படம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளின் விஸ்வாசம் விநியோம உரிமையை சாய்பாபா என்பவர் பெற்றுள்ளார். இவர் சினிமா பைனான்சியர் உமாபதியிடம் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால், கடன் தொகையில் ரூ.78 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் பணத்தை திருப்பித்தரும் வரை விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து, சாய்பாபா சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் உமாபதிக்கு கொடுக்க வேண்டிய பாக்கித்தொகையில் ரூ.35லட்சத்தை காசோலையாக தருவதாகவும், மீதித்தொவ்யை 4 வாரத்துக்குள் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சாய் பாபாவின் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க