• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை திருச்சி சாலை ரெயின்போ அபார்ட்மென்ட் வளாகத்தில் மரம் விழுந்து கார் சேதம்

November 8, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர் பகுதிகளில் கனமழையால் அவிநாசி சாலை, திருச்சி சாலை போன்ற பகுதிகளில் மரம் விழுந்து விபத்து – இதை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால சுன்கரா நேரில் பார்வையிட்டார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் காவலர் சமுதாயக்கூட வளாகத்தில் இருந்த 20 ஆண்டுகள் பழமையான பூவன் மரம் ஒன்று கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்தது.கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது.

சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனிடையே கோவை-அவினாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாயக்கூட வளாகத்தில் 20 ஆண்டுகள் பழமையான பூவன் மரம் ஒன்று கனமழையால் வேரோடு சாய்ந்து அவினாசி சாலையில் விழுந்தது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் அதிகாலை நேரம் என்பதால், ஆள் நடமாட்டம் இல்லை இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் பொக்லைன் உதவியுடன் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க