February 28, 2020
குமரகுரு கல்வி நிறுவனங்கள் “யுகம் – 2020” கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தென்னிந்திய அளவிலான மாபெரும் கலாச்சார, தொழில்நுட்ப, விளையாட்டு விழாவாகத் திகழும் ‘யுகம் – 2020’ வரும் பிப்ரவரி 29 முதல் மார்ச் 7 வரை நடைபெற உள்ளது.
இது குறித்து கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் விஜிலேஸ், கல்லூரி மாணவர்கள் ஜெயசூர்யா, ஆதித்யா ஆகியோர் கூறுகையில்,
இது எட்டாவது யுகம் நிகழ்வாகும். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நாடுமுழுவதுமுள்ள 1000 மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 20,000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். டெக் கான்க்ளேவ், இன்ஸ்பயர் இந்தியா, யுத் கான்க்ளேவ், சோசியல் கான்ஸ்ட்டன்ட்ஸ் மற்றும் ப்புரேஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்தத் தென்னிந்திய அளவிலான இவ்விழா முழுக்க மாணவர்களால் மேற்கொள்ளப்டுவது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப மாநாடு – டெக் கான்க்ளேவ்
இவ்விழாவில் முக்கியமான நிகழ்வாக அங்கம் வகிக்கும் டெக் கான்க்ளேவ் 2020 எனும் தொழில்நுட்ப மாநாடானது புதுமைகளை நோக்கிய யோசனைகள், ஊகங்கள், வடிவமைப்புகள் மற்றும் புரட்சிகள் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியா யூத் கான் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கும், ஊக்கவிப்பதற்குமான நோக்கத்தினை அடிப்படையாகக்கொண்ட இந்நிகழ்வு நிறுவப்பட்ட ஐ கான்களுக்கான அனுபவங்களைப் பகிரிந்துக் கொள்வதற்கான செயல்பாடாக திகழ்கின்றது. தொழில் முனைவிற்கான உணர்வினை, ஆர்வத்தினை ஊக்குவிப்பது, மாணவர்களின் நிர்வாகத் திறனை வளர்ப்பது, பங்கேற்பாளர்க்களுக்கு நிறைவானதொரு நுகர்வனுபவத்தினை அளிப்பது உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்நிகழ்வு நிகழ்த்தப்படுகின்றது. அரசு, தனியார், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களால் அமைக்கப்பட்ட 80 மேற்பட்ட ஸ்டால்களைக் கொண்டதாக இந்நிகழ்வு அமைகின்றது.
சோசியோ கான்ஸ்டன்ட் 2020
ஆசைப்படுதல், அக்கனவடைவிற்கான அதிகாரம் பெறுதல் மற்றும் மாற்றத்தினை உருவாக்குதல் எனும் முப்பரிமாண குறிக்கோள் மற்றும் பயணங்களின் மூலம் 30,000 மேற்பட்ட இளைய தலைமுறையினரை ஆத்மார்த்தமாக அணுகும் முறையாக இந்நிகழ்வு விளங்குகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் இளம் மனதினை ஊக்கமூட்டி ஆரோக்கியமான ஒன்றிற்காக மனதையும், உடலையும் இயக்கும் விருப்பத்தினை ஏற்படுத்தி, செயல்படுத்துவதே இந்நிகழ்வின் அடிப்படையாகும். சுயஉதவிக் குழுக்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பட்டறைகள் ஆகியவற்றின் மூலம் இளைய தலைமுறையினரை வலுவூட்ட முயல்கின்றது இந்நிகழ்வு.
இவ்வாண்டு பிப்ரவரி 6 ஆம் தேதியன்று ‘தைக்குடம் பாலம்’ குழுவினரின் இசை நிகழ்வும், தொடர்ந்து பிப்ரவரி 7 ஆம் தேதியன்று ஷோபனாவின் டிரான்ஸ் நிகழ்வும் நடைபெறவுள்ளது.விளையாட்டு மாவட்ட அளவிலான பேட்மிட்டன், மாநில அளவிலான காபாடி மற்றும் கைப்பந்து, தென்னிந்தியளவிலான கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் அடங்கிய போட்டி நிறைந்த, ஆர்வமூட்டும் நிகழ்வாக யுகத்தின் களம் நிகழ்வு திகழ்கின்றது.
பல்வேறு பங்கேற்பாளர்கள் இந்த யுகம் 2020 நிகழ்வில் கலந்துகொண்டு, ரூ 20 இலட்சம் மதிப்புள்ள பரிசுகளை வெல்வதற்காக, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வாகைச்சூடத் தயாராகவுள்ளனர் என்றனர்