• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜி.எச்.இருப்பிட மருத்துவர் ஓய்வு; கண்ணீர் மல்க அனுப்பிவைத்த பொதுமக்கள்

November 30, 2019 தண்டோரா குழு

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் ஓய்வு பெற்றார். மக்களுக்கு சேவையாற்றியதற்காக பல்வேறு விருதுகளை பெற்றவர்.பொதுமக்கள் கண்ணீர் மல்க அனுப்பிவைத்தனர்.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சௌந்தரவேல். அவர் கோவை மருத்துவமனையில் துணை இருப்பிடம் மருத்துவராக பணிபுரிந்து பிறகு பதவி உயர்வு பெற்று கடந்த 5 வருடங்களாக இருப்பிட மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் பணி புரியும்போது எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், முகம் சுளிக்காமல் தன்னை உதவிக்காக நாடி வரக்கூடிய அனைத்து மக்களையும் அன்புடன் உள்ளே அழைத்து அவர்களுடைய குறைகளை உடனுக்குடன் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வார்.

என்ன மருத்துவ உதவி தேவையோ உடனடியாக செய்து கொடுப்பது வழக்கம். அதேபோல அரசு ஊழியர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், காவல்துறையினர் என எல்லாத் தரப்பு மக்களிடமும் மிகவும் அன்புடனும் எளிமையுடனும் பழகி உதவி செய்து வந்தவர். நமக்கு இந்த பணி இறைவன் வழங்கியது. அந்தப் பணியில் இருக்கும் வரை நாம் பொதுமக்களுக்கும் அனைவருக்கும் மருத்துவ துறை சார்பாக உதவியாக இருக்க வேண்டும். நமக்கு விரோதமாக எண்ணம் கொண்டவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று தாரக மந்திரமாக கூற கூடியவர். அவர் பணியில் இருக்கும் பொழுது 24 மணி நேரமும் அவசர தேவைக்காக எப்பொழுது தொலைபேசி மூலமாக அழைத்தாலும் போனை எடுத்து பேசுவார். உடனடியாக பதில் கொடுத்து இந்த வார்டில் நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வார்டிற்கு உடனே தொடர்பு கொண்டு உதவி செய்யும்படி அறிவுறுத்த கூறியவர். இவருடைய பணியையும், இவர் செய்த சமூக உதவிகளையும் பாராட்டி கோவையில் உள்ள அனைத்து சமூக அமைப்புகளும் சிறந்த மருத்துவர் சேகர், மனிதநேய பண்பாளர் உள்பட என 50-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. இன்றுடன் அவருடைய அரசு பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுகிறார். இன்று காலையில் இருந்தே அனைத்து தரப்பட்ட மக்களும் அவருடைய அலுவலக வாசலில் குவிந்து கண்ணீர் மல்க வாழ்த்துக்களை கூறினர். அதை பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருந்தது.

மேலும் படிக்க