May 27, 2021
தண்டோரா குழு
கோவை ஜி.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் சார்பாக காந்திபுரம்,க்ராஸ் கட் சாலையில் ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிப்போர்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நோய் பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு தன்னார்வல அமைப்பினர் பலர் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை,காந்திபுரம் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் சார்பாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட நாள் துவங்கி தினமும் அந்த பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள ஜி.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் முன்பாக,சமூக விலகலை கடைபிடித்து, அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு புளி சாதம்,சாம்பார் சாதம்,லெமன் சாதம் என தினமும் சுமார் 250 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.