• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜல்லிக்கட்டு;முதல் முறையாக மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு இன்சூரஸ்

February 20, 2020

கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகிற 23 ம் தேதி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன்,செயலாளர் தங்கவேலு,தமிழ்நாடு ரேக்ளா பேரவை தலைவர் அர்ஜூனன் மற்றும் காவல்துறையினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் ஏற்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன்,

கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டி 23 ம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ளது.
தமிழகத்திலேயே மிகப்பெரிய கேலரி அமைத்து மக்களுக்கு தீங்கு இல்லாமல் இருக்க சீரும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

மக்களுக்கு தண்ணீர்,உணவு,பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு மாட்டு காளை கண்காட்சி,கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
750 முதல் 900 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராட்டம் நடத்திய அனைத்து இளைஞர்களுக்கும் மதிப்பளித்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

காயமடைவோர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்க உள்ளோம் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் பரிசு பொருட்கள் வழங்க உள்ளோம்.
அனைத்து வீரர்களுக்கும் மாடுகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.1000 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு நடத்துகிறோம்.ஆயிரம் வாகனங்கள் கூட பார்க்கிங் செய்ய வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இதுவரை 4150 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வளர்க்கப்பட்ட 300 காளைகள் களமிறக்கப்படும் அடுத்த ஆண்டு முதல் கோவை காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.கடந்த ஆண்டு 50 முதல் 1 லட்சம் பார்வையாளர்கள் வரை பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு 3 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு கேலரியில் 8 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பட்டியை காணலாம். முதல் பரிசாக மாருதி ஆல்டோ கார்,இரண்டாம் பரிசாக மோட்டார் பைக்,மூன்றாம் பரிசு ஸ்கூட்டர் வழங்கப்படும்

சிறந்த காளையை வளர்த்தவருக்கு நாட்டு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்படும்.கோவை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் முதல் முறையாக இன்சூரஸ் செய்யப்பட உள்ளது என்றார்.

மேலும் படிக்க