July 30, 2025
தண்டோரா குழு
கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ந நடத்திய ஸ்லோகன் போட்டியில்,
மொபைல் போன் வாங்கிய குனியமுத்தூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் எனும் பிரம்மாண்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை மையம் கடந்த 9 ந்தேதி துவங்கப்பட்டது.70,000 சதுர அடியில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள இதன் துவக்க விழாவை முன்னிட்டு மூவாயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு ஸ்லோகன் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதல் பரிசாக கார் மற்றும் ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஸ்லோகன் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.இந்நிலையில் ஸ்லோகன் போட்டியாளர்களை குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்து,அதில் நாற்பது பேருக்கு சேரா ஹோம் ஜங்ஷன் வளாகத்தில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஐயாயிரம் மதிப்புள்ள பரிசுகள் துவங்கி ஐம்பதாயிரம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டு இறுதியில் முதல் பரிசாக கார் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி அறிவிக்கப்பட்டார்.இதில், கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அயூப்கான்,முனீரா பேகம் என்ற தம்பதியினர்ருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
குடும்பத்துடன் சாதாரணமாக ஏதாவது பரிசு தமக்கு கிடைக்கும் என நிகழ்ச்சிக்கு வந்த முனீரா பேகம் கார் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய மொபைல் போன் ஒன்றை சேரா ஹோம் ஜங்ஷனில் வாங்கி,ஸ்லோகன் போட்டியில் கலந்து கொண்டதாகவும்,எதிர்பாராமல் கார் பரிசு கிடைத்துள்ளது இன்ப அதிர்ச்சி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து முதல் பரிசை வென்ற குடும்பத்தினருக்கு கார் சாவியை,
சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டைசன் மார்டின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் சி.ஓ.ஓ.ஜார்ஜ் மார்ஷல்,மற்றும் நிர்வாகிகள் நிர்மல் அபுதாகீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.