May 9, 2021
தண்டோரா குழு
கோவையிலும் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 காவலர்கள் என ஏழு பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.அதனை தொடர்ந்து செல்வபுரம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள தனம் திருமண மண்டபத்திற்கு காவல் நிலையம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் செல்வபுரம் காவல் நிலையம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. ஒரே காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியானது பிற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.