December 31, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் குரூப் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘சென்ட்ரல் தியேட்டர்’ வளாகத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த இடம், கோவையின் மிக முக்கியமான மற்றும் அதிக தேவை கொண்ட பகுதிகளில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கையகப்படுத்துதலின் மூலம், நகர்ப்புறங்களில் உள்ள ப்ரீமியம் நிலங்களை,பொறுப்பான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற வளர்ச்சித் திட்டங்களாக மாற்றுவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையை ஜி ஸ்கொயர் குரூப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
‘சென்ட்ரல் தியேட்டர்’ வளாகத்தை கையகப்படுத்தியது குறித்து ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறியதாவது:
“கோயம்புத்தூர் சென்ட்ரல் தியேட்டர் வளாக இடத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதோடு, நவீன வணிகத்திற்கான அவசியத்தையும், வளாக குடியிருப்புக்கான மதிப்பையும் இணைத்து, மிகவும் பொறுப்புடன் இதனை மீண்டும் கட்டியெழுப்புவதே எங்களின் நோக்கம்.” என்றார்.