• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சூலூரில் 53 பவுன் நகை ,3 கிலோ வெள்ளி கொள்ளை

May 22, 2018 தண்டோரா குழு

கோவையில் இரண்டு வீடுகளை உடைத்து 53 பவுன் நகைகள் 3 கிலோ வெள்ளி மற்றும் 80,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம சூலூரில் நேற்று ஒரே நாளில் இரண்டு வீடுகளின் கதவுகளை உடைந்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.சூலூர் விமானப்படைத் தளத்தின் பின்புறம் உள்ள காடம்பாடி பிருஷ்ணா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் (45) இவர் அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிகிறார்.

இவர் தனது மனைவி சிலம்புச்செல்வி மற்றும் மகனுடன் சனிக்கிழமையன்று தனது சொந்த ஊரான பழனிக்குச் சென்றிருந்தார்.நேற்று காலை ஊரிலிருந்து நேராக வங்கிக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது அவரது வீட்டின் கதவு முன்பக்கமாக உடைந்து திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் ரூ80,000/. பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

அதேபோல சூலூர் காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள பி.கே.டி.நகரில் வசித்து வருபவர் வெங்கட்ராமன்,தனியார் நர்சிங் கல்லூரி பேராசிரியர் இவரும் இவரது வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார்.அப்போது இவரது வீடும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவை உடைத்த கொள்ளையர்கள் அதிலிருந்த 23 பவுன் நபைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.சூலூரில் ஒரே நாளில் இரண்டு வீடுகளின வீட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க