கோவையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பல்வேறு விதிமுறைகளை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று(ஜன 30) மனு அளித்தனர்.
மோட்டார் வாகன சட்டத்தின் படி எட்டு மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பணி செய்ய கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை ரத்து செய்ய கோரி சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓட்டுநர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணி புரிய கூடாது, வாகனங்களில் ஜி பி எஸ் பொருத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் ஓட்டுநர்கள் பின்பற்ற முடியாத நிலையில் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள்மனு அளித்தனர் .மேலும்,விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர் .