February 21, 2018
தண்டோரா குழு
கோவை சுங்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கேன்டீனில் தரமற்ற அரிசியில் (பிளாஸ்டிக் அரிசி) தயாரிக்கப்படும் உணவு வழங்கப்படுவதாக போக்குவரத்து ஊழியர்கள் புகார் அளித்தனர்.
இந்த அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தை உருட்டி வீசினால் பந்து போல மேலே எழும்புவதாக குற்றச்சாட்டி 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று மதிய உணவை புறக்கணித்தனர்.
மேலும் இந்த உணவை உண்ட சில தொழிலாளர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும், தரமற்ற சாதம் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மேலும், ராணியம்மா என்பவரே சுங்கம் பணிமனையின் கேண்டீன் ஒப்பந்ததாரர் என்றும் அவரை மாற்ற வேண்டும் எனவும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.பல்வேறு சமயங்களில் தரமற்ற அரிசியை போல் காய்கறிகளும் அழுகிய நிலையில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.