November 29, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சுகுனாபுரம் பகுதி உள்ளது.
இந்த சுகுணாபுரம் மலை பகுதிகளில் எண்ணற்ற மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள சுகுணாபுரம் கிழக்குப் பகுதியில் தன்னாசி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.நேற்று இரவு அவ்வழியே வந்த ஒருவர் தன்னாசி ஆண்டவர் கேட்டின் மேல் ஏதோ மிருகம் படுத்திருந்தை பார்த்தார். மீண்டும் உற்று நோக்கியபோது அது சிறுத்தை என அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த போது கோயிலின் கேட்டின் மேல் கால் தடமும் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதையும் உறுதி செய்து அவ்விடத்திற்கு மக்கள் யாரும் செல்லக்கூடாது என அந்த கோவில் பகுதி கேட்டை பூட்டிச் சென்றுள்ளனர்.
சிறுத்தை வந்த செய்தியால் அப்பகுதி பரபரப்பு அடைந்துள்ளது.