• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரியில் பட்டமளிப்பு விழா !

December 6, 2022 தண்டோரா குழு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2016,2017 மற்றும் 2018ம் ஆண்டில் பயின்ற இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி செயலர் ஆயர். டேவிட் பர்னாபஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜெமிமா வின்ஸ்டன் ஆண்டறிக்கையை வாசித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக
பண்டித் தீனதயாள் எனர்ஜி பல்கலைக்கழக (குஜராத்) துணை வேந்தர் டாக்டர். சுந்தர் மனோகரன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

இது உங்கள் வாழ்க்கையில் சாதாரண நிகழ்வோ நொடிகளோ அல்ல.இது ஒரு அசாதாரண நிகழ்வு.இன்று பட்டம் பெரும் ஒவ்வொருவரையும் நான் மில்லினர் என்று அழைப்பேன். ஏனெனில் 1.4 பில்லியன் மக்களில் நீங்கள் மில்லினியராக தெரிகிறீர்கள்.உங்கள் சாதனை உங்களுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள்.சாதாரண வாழ்க்கையை குறிக்கோளாக வைக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைகின்ற ஒவ்வொரு படியும் பலருடைய வாழ்வை மாற்றக்கூடிய திறன் உள்ளது என்றார்.

சி.எஸ்.ஐ கோவை தென் இந்திய திருமண்டல பேராயர் மற்றும் பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் பிஷப் திமோத்தி ரவீந்தர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவ்விழாவில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க