February 17, 2021
கோவை காந்திபுரம் 7வது வீதி தொடர்ச்சியில் அமைந்துள்ளது சி எஸ் ஆர் மருத்துவமனை. இம்மருத்துவமனையில் இன்று (17.02.2021) புதிய டயலிஸ் மையம் சுப்ரமணியம் செட்டியார் நினைவாக துவக்கப்பட்டுள்ளது. இந்த டயலிஸ் மையமானது அரிமா சங்கம் 324 பி5 உதவியுடன் அமைக்ப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அரிமா சங்க முன்னாள் சர்வதேச இயக்குனர் அரிமா ஜி. ராமசாமி கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக அரிமா சங்க முன்னாள் சர்வதேச இயக்குனர் அரிமா. கே. ஜி. ராமகிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். அரிமா மாவட்ட ஆளுநர் எஸ். தர்மராஜ் டயலிஸ் மையத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். இந்த டயலிஸ் கருவியை லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்பத்தூர் ரேஸ் கோர்ஸ் சார்பில் அரிமா லக்ஷ்மி சுப்பிரமணியம் நன்கொடையாக வழங்கினார். சி.எஸ்.ஆர். மருத்துவமனையின் தலைவரும் அரிமா மாவட்ட தலைவருமான அரிமா. மருத்துவர் சி எஸ் ஆர் குமார் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் விழாவில் அரிமா சபை செயலாளர் அரிமா சங்கர் செல்வராஜ், பொருளாளர் அரிமா மருத்துவர் வி. ஸ்ரீனிவாச கிரி, சி எஸ் ஆர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரஜினி மற்றும் டாக்டர். சூரஜ் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.