July 23, 2021
தண்டோரா குழு
கொரோனா நோய் தொற்று முதல் முறையாக தோன்றி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. கடந்து வந்த பாதை, மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. சிலரால் போராடி வெல்ல முடிந்தது பலரால் முடியவில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஒரு கட்டத்தில் படுக்கை வசதியும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் உடனடி கவனத்துக்கு வந்தன.
எதிர்பாராத ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க, சி.எஸ்.ஆர் மருத்துவமனை ஒரு அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி கருவியை நிறுவியது.கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கருவிகளில் இது முதன்மையாகும். இது சிஎஸ்ஆர் நல அறக்கட்டளை நன்கொடையாக வழங்கி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 100 லிட்டர் தயாரிக்கும் இந்த கருவியை செர்ரி பிரிசிஸன் வடிவமைத்துள்ளது. மருத்துவமனைக்கு தேவையான, போதுமான ஆக்சிஜன் இதிலிருந்து பெற முடியும். ஆக்சிஜன் தேவையுள்ள நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோம், காந்திபுரத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை. இது மட்டுமின்றி, கோவிட் சிகிச்சைக்கென ராம்நகர் மற்றும் ராமநாதபுரத்தில் இரண்டு தனி சிஎஸ்ஆர் தொற்று நோய் சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.மாநிலங்களில் மிகச் சில மருத்துவமனைகளிலேயே உள்ள ஆக்சிஜன் உற்பத்தி வசதியை, சி.எஸ்.ஆர். மருத்துவமனைகள் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.