• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிபிஎம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

July 5, 2017 தண்டோரா குழு

கோவை காந்திபுரத்தில் சி.பி.எம் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் தலைமறைவாக உள்ள ஓருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் சி.பி.எம் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி அதிகாலை மர்மநபர்கள் இரு பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர்.அது அங்கிருந்த கார் மீது விழுந்து வெடித்தது. பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும் சி.பி.எம் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில் இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக நபரை பிடிக்க தனிப்படை காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கைது சரவணக்குமார் இந்து அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீஸ் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க