August 21, 2021
தண்டோரா குழு
ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் தங்களது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை ஆடிமாதம் அஸ்த்தம் நட்சத்திரம் தினத்தன்று துவங்கி 10 நாட்கள் கொண்டாடப்படும், இந்த 10 நாட்களும் தினமும் வீட்டின்முன் பூக்கோலங்கள் போட்டு, வழிபாடு செய்து கொண்டாடி வருவது வழக்கம் இதில் 10 வது நாள் திருவோண நட்சத்திர நாளன்று திருவோணம் விமர்சையாக மளையாள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், பொது இடங்களில் கூடவோ, ஓணம் தினத்தன்று கோவில்களில் வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஓணம் பண்டிகையை ஒட்டி கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் தங்களது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரானா காலம் என்பதால் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை. பக்தர்கள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்துவருகின்றனர்.
வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி பூக்கள் கோலம், நடனம், விருந்து என கொண்டாடும் ஓணம் பண்டிகை இப்போது அவரவர் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர். பப்படம் பழம் பாயாசம் அவியல் அவியல் கூட்டு பொரியல் துவையல் இஞ்சி புளி வகையான பழங்கள் அடைப் பிரதன் என்பது தவிர்க்க முடியாத பாயசம் சாப்பாடு குழம்பு ரசம் மோர் உள்ளிட்ட உணவு வகைகள் இன்று பல்வேறு குடும்பங்களில் உணவாக உட்கொள்வது குறிப்பிடத்தக்கது.