December 17, 2020
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர், சிவானந்தா காலணியில் அம்மா மினி கிளினிக் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி
பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா மினி கிளினிக் திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெசவாளர் காலனியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்கை இன்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சிவானந்தா காலணி டாடாபாத் இரண்டாவது வீதியில் அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்தார். அப்போது கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் உடன் இருந்தார்.