March 25, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் குளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவரும் கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளருமான டாக்டர் மகேந்திரன் இன்று தன்னார்வ அமைப்புகள் இணைந்து, கோவை சிங்காநல்லூர் குளத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு மரக் கன்றுகளை நட்டு வைத்தார்.பின்னர் குளத்தின் நிலை குறித்தும், அதன் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கலந்து ஆலோசித்தார்.
பல்லுயிர் பெருக்கியாக இருக்கும் சிங்காநல்லூர் குளத்தினை பாதுகாத்திட அரசு தவறி விட்டதாகவும், தான் வெற்றி பெற்றால் குளத்தை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். பின் தன்னார்வ அமைப்பினருடன் கலந்துரையாடினார்.