• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை: சிஏஏ போராட்டக் களத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி!

February 20, 2020

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டக்களத்தில் புதுமண தம்பதியினர் திருமணம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இன்று இரண்டாவது நாளாக 200 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே போராட்டக்களத்தில் அப்துல்கலாம் – ரேஷ்மா ஷெரின் ஆகியோர் திருமணம் நடைபெற்றது. குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான அப்துல்கலாமிற்கும், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ரேஷ்மா ஷெரினுக்கும் இன்று திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதனை மாற்றி போராட்டக்களத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. மேலும் புதுமண தம்பதியினர் சிஏஏவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மக்களின் போராட்ட களத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இங்கு திருமணம் செய்ததாகவும், சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென புதுமண தம்பதியினர் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க