கோவை சாய்பாபா காலனியில்
பேஜ் 3 சலூனின் இரண்டாவது கிளை இன்று துவங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் அழகு கலை மற்றும் ஆரேக்கிய தொழில் முன்னணி வகித்து வரும் சி.கே குமரவேல், வீணா குமரவேல் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையில் உருவானது தான் பேஜ் 3. இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இந்த அழகு கலை சேவையை அளித்துள்ளது.
இந்நிலையில், கோவை சாய்பாபா காலனியில் அவினாசிலிங்கம் கல்லூரி சாலையில், ஜிசிடி அருகில் 4000 சதுரடியில் வட்ட வடிவிலான புதுமையான வகையில் அருமையான உள் அமைப்பில், சொகுசான அனுபவத்தை பெறும் வகையில் பேஜ் 3 சலூனின் இரண்டாவது கிளை
இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த சலூனை முன்னணி பாடகர் சக்திஸ்ரீ கோபாலன்,வனிதாமோகன் மற்றும் தனலட்சுமி ஜெயச்சந்திரன் மற்றும்,சி.கே.குமரவேல் வீணாகுமராவேல் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
இந்த சலூனில் பயிற்சி, சான்றிதழ் பெற்ற மற்றும் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்கள் சேவையாற்றுகின்றனர். தென்னிந்திய அளவில் பல திரைப்பட தொழில் நிறுனங்களுடன் இணைந்து திரை நட்சத்திரங்களுக்கும் பணியாற்றி வருகிறது.
சர்வதேச அளவில் திறனும், அனுபவமும் கொண்ட சண்முககுமார் இந்த சலூன் தொடரின் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் இந்த சலூன்களின் உரிமையாளர்களாக லதா மற்றும் சண்முககுமார் உள்ளனர்.
ஒவ்வொருக்கும் தனித்தனியாக பொருட்களை ஒரு முறை பயன்படுத்தும் வகையில் வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.ஐஎஸ்ஓ 9001 மற்றும் 14000 சான்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு