December 26, 2020
தண்டோரா குழு
கோவை மாநகர் மேற்கு மாவட்டம் சாய்பாபா காலனி பகுதிக்கு உட்பட்ட வெங்காட்டாபுரம் மக்கள் கிராமசபை கூட்டத்தை நடத்த விடாமல் காவல்துறையினர் தடுப்பு – பகுதி பொறுப்பாளர் கே எம் ரவி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டு மனுவாக பெறப்பட்டு வருகிறது. இந்த கிராமசபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், கோவை மாநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சாய்ப்பப்பகாலனி திமுக பகுதி கழகத்தின் 13வது வட்ட சார்பாக கிராமசபை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் கலந்துகொண்ட நிலையில், பொதுமக்களையும்,இதில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, காவல்துறையின் தடையை மீறி சாயிபாபாகாலனி பகுதி பொறுப்பாளர் கே.எம் ரவி, மற்றும் 13வது வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டம் துவங்கப்பட்டது. இதனை காவல்துறையினர் தடுத்ததால் தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி கழக பொறுப்பாளர் கே எம் ரவி, 13 வது வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் நந்தகுமார் ,கிருஷ்ணராஜ் ,ஆனந்தகுமார், மோகன் பகுதி பொறுப்பு சுக்குலால் பாபு,மணி 11 வது வட்ட செயலாளர் பிரபு ,12வது வட்ட செயலாளர் அகஸ்டின் தனபால், 45 வட்ட செயலாளர் பாபு என்ற பார்த்திபன், இளைஞரணி பகுதி அமைப்பாளர் கண்ணன்,ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார், இளைஞரணி அமைப்பாளர் பாபு ,ஆறுமுகம், குமார் ,இஷாத், கண்ணன் பத்மநாபன் ,வரதராஜன் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.