December 11, 2020
தண்டோரா குழு
மக்களின் மனதில் இடம் பிடித்த கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால்
இன்று உயிரிழந்தார்.
தமிழகத்தில் அம்மா உணவகம் வந்த பிறகு, பல ஏழைகளின் மனதும், வயிறும் நிரம்பியது. ஆனால், கோவையில் அம்மா உணவகத்துக்கு முன்பிருந்தே, அந்தச் சமூகப் பணியைச் செய்து வருகிறது. சாந்தி சமூக சேவை நிறுவனம் (Shanthi Social Services). தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் சாந்தி ஷோஷியல் சர்வீசஸ் கேன்டீன்.
அதே நேரத்தில், சாந்தி கியர்ஸின் விலைக்குத் தமிழகத்தில் தரமான உணவுகளை எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது உண்மையோ உண்மை.இப்படி அனைத்து மக்களுக்கும் தரமான உணவும்,மருந்தும் கிடைக்க லாப நோக்கமின்றி குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி கோவை மக்களின் மனதில் இடம் பிடித்த கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால்
இன்று உயிரிழந்தார். அவரது மரணம் கோவை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.