January 12, 2021
தண்டோரா குழு
குழந்தைகள் முதியவர்கள் இளைஞர்கள் மற்றும் சுடர் குடும்பத்தினருக்கான ( எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ) சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது.
கோவை சாந்தி ஆசிரமம் சார்பில் குழந்தைகள் முதியவர்கள் இளைஞர்கள் மற்றும் சுடர் குடும்பத்தினருக்கான ( எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ) சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழாவை சாந்தி ஆசிரமம் தலைவர் மருத்துவர் வினு அரம் தலைமை இளைஞர் அணி பொறுப்பாளர் விஜயராகவன் வழிநடத்தினார். நிகழ்வில் பல்வேறு சமயத் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம், ஹார்வெஸ்டர் மிஷின் செயலாளர் ஃபாதர் ரூபன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவில் அப்துல் ஹக்கீம் பேசும்பொழுது,
விவசாயிகள் விவசாயம் ஆகியவற்றின் முக்கியத்துவமும் நோய் நிவாரணம் பற்றியும் சமூக ஒற்றுமையை பற்றியும் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் பொன்மொழிகள் இலிருந்து எடுத்துக்காட்டுடன் உரையாற்றினார்.
குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு நடைபெற்றது. விவசாயிகளை நினைவு கூர்வதற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஏழை-எளிய மற்றும் நோயாளிகளை பராமரிப்பது போன்ற பணிகளுக்கான சிறப்பு நிகழ்வாக இது இருந்தது.
நிறைவில் ரோட்டரி கிளப் தலைவர் நிர்மலா நடராஜன் பரிசுகளை வழங்கினார்.