December 2, 2021
தண்டோரா குழு
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்தில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அந்நிறுவன வணிக வளாகத்தில் நேற்று சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.