• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை – காரணம் என்ன?

July 7, 2023 தண்டோரா குழு

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இவர் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்தார். பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜியாக கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பந்தய சாலை பகுதியிலுள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார்.நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் விஜயகுமார்.

கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது வரை தற்கொலைக்கான காரணங்கள் வெளிவராத நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க