May 18, 2018
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு நவீன பொருட்கள் மற்றும் ஆடைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை இரவு நேர சந்தையாக அமைக்கப்பட்டு இருந்தது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
கோவை அவினாசி சாலை பகுதியில், பல்வேறு பொருட்கள் மற்றும் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.குறிப்பாக ஆடைகள், பைகள் மற்றும் கடிகாரங்கள் மற்றும் புது புது டிசைன்களில் அனைத்து பொருட்களும் வித்யாசமாக வைக்கப்பட்டு இருந்தனர்.
மேலும்,குழந்தைகளுக்கு என பிரத்யேக பொழுது போக்கு விளையாட்டுகளும் இருந்தன.இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மாலை துவங்கி இரவு நேர சந்தையாக இருந்தது.இதனால் ஏராளமான பொதுமக்கள் இந்த கோவை சந்தைக்கு வந்து தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி சென்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சந்தையில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தனர். மேலும்,குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது.