February 13, 2026
தண்டோரா குழு
கோவை சத்தி சாலை கணபதியில்
கஃபே டி என்ற புதிய தேநீர் விடுதி திறக்கப்பட்டது.இதனை கோவை மேயர் ரங்கசாமி ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதுகுறித்து கஃபே டி கிளையின் உரிமையாளர் செல்வாம்பிகை கூறுகையில்,
சென்னையில் பிரபலமான கஃபே டி என்ற தேநீர் விடுதி கோவை சத்திசாலையில் கணபதியில் சூர்யா ஹாஸ்பிடல் எதிர்ப்புறம் உள்ள சாலையில் திறக்கப்பட்டது.இன்று காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தேநீர் விடுதி செயல்படும். பார்ட்டிகளை இங்கு கொண்டாடி மகிழலாம் என்றார்.
இதுகுறித்து கஃபே டி நிறுவனர் சுந்தர மூர்த்தி கூறுகையில்,
எங்கள் முதல் கிளை சென்னையில் துவக்கப்பட்டது.தற்போது கோவையில் இரண்டாவது கிளையை திறந்துள்ளோம். தனி செப் மூலம் ஸ்பெஷலாக புதிய மெனுக்களை தயாரித்துள்ளோம். இதுதான் எங்கள் கடையின் சிறப்பு.ஸ்பெஷல் பில்டர் காப்பி தான் எங்கள் சிறப்பு. அதைமட்டுமின்றி எல்லா விதமான மக்களும் வந்து செல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப குறைந்தது 20 ரூபாய் இருந்து 300 ரூபாய் வரை பீட்சா, பர்கர் வகைகள் போன்ற உணவுகள் இங்கு கிடைக்கும்.
நாகர்கோவில், கும்பகோணம், திருநெல்வேலி,ஆந்திராவில் குண்டூர், விஜயவாடா ஆகிய இடங்களில் புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.