• Download mobile app
11 Oct 2025, SaturdayEdition - 3531
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பில் 2025-2026 9-ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவியர்களின் கைப்பந்துப் போட்டிகள் !

October 11, 2025 தண்டோரா குழு

கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பில் 2025-2026 9-ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவியர்களின் கைப்பந்துப் போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் 9.10.2025, 10.10.2025 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றன.

போட்டியை,பள்ளி முதல்வர் கருணாம்பிகேஸ்வரி துவக்கி வைத்தார். இதில் கோவை,திருப்பூர், ஈரோடு, அவிநாசி,காங்கேயம் போன்ற பல இடங்களிலுள்ள பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முதல்நாள் 9.10.2025 அன்று மாணவிகளுக்கான 14 வயதிட்குட்பட்டோர் பிரிவு, மற்றும் 17 வயதுக்குட்பட்டோர்க்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்புடன் தொடங்கியது. எறியப்பட்ட ஒவ்வொரு பந்தும் மாணவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்,உற்சாக அலைகளை எழுப்பியதுடன் ஆர்வம்,விடாமுயற்சி மற்றும் குறிக்கோளை அடையும் நோக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தின.

இதைத் தொடர்ந்து அக்டோபர் 10, 2025 அன்று ஆண்கள் பிரிவில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகள் பங்கேற்றன. 500 க்கும் மேற்பட்ட திறமையான மாணவர்கள் தங்கள் திறமைகளையும் உறுதியையும் வெளிப்படுத்தினர்.ஒவ்வொருவரும் தங்கள் பள்ளிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போட்டியிட்டனர்.

14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் Kids club பள்ளி முதல் இடத்திலும் , விவேகானந்தா அகாடமி இரண்டாமிடமும், பெற்றுள்ளன.மேலும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சிறந்த கைப்பந்து வீராங்கனையாகத் Kids club பள்ளியைச் சேர்ந்த ஷிவானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் 17வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடத்தில் சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியும்,விவேகானந்தா அகாடமி இரண்டாமிடமும் பெற்றன.சிறந்தகைப்பந்து வீராங்கனையாகத் சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த சத்தியப்பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.அனைத்து பிரிவிலும் மூன்று பள்ளிகள் சம்மானப் புள்ளிகளைப் பெற்றதால் சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி, Kids club பள்ளி மற்றும் விவேகானந்தா அகாடமி ஆகிய பள்ளிகளுக்கு சுழற்கோப்பையானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டது.

14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் விவேகானந்தா அகாடமி முதல் இடத்திலும் , Kids club பள்ளி இரண்டாமிடமும், பெற்றுள்ளன.மேலும் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சிறந்த கைப்பந்து வீரராகத் விவேகானந்தா அகாடமி சேர்ந்த சந்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும் 17வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடத்தில் Kids club பள்ளி, Smart modern பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

சிறந்த கைப்பந்து வீரராகத் Kids club பள்ளியைச் சேர்ந்த S. சஞ்சித் (Grade 11) தேர்ந்தெடுக்கப்பட்டார்.19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடத்தில் Kids club பள்ளி, விவேகானந்தா அகாடமி இரண்டாமிடமும் பெற்றன. சிறந்த கைப்பந்து வீரராக Kids club பள்ளியைச்,சேர்ந்த குருபாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும் அனைத்துப் பிரிவிலும் அதிக இலக்கைப் பெற்று Kids club பள்ளி சுழல் கோப்பையை வென்றது.

மூன்று பிரிவுகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த இரண்டு நாள் நிகழ்விற்கு கோவை கைப்பந்து சங்கத்திலிருந்து HACD செயலாளர் தனக்குமார் தலைமையிலான கோவை கைப்பந்து சங்கத்தினர் நடுவர்களாக இருந்து போட்டிகளை தொடர்ந்து சிறந்த முறையில் நடத்த உதவி புரிந்தனர்.

மேலும் படிக்க