February 17, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள 38,635 கோவில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இடித்து கட்டப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை கோனியம்மன் கோவிலில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,
“கோவை கோனியம்மன் கோவிலின் குளம் இடத்தில் உள்ள பார்க்கிங்கை அகற்றி, கோவிலிடம் மாநகராட்சி உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
இந்து கோவில் சொத்துக்கள் 4,72,234 ஏக்கர், 22,000 கட்டிடங்கள், 33,000 மனைக்கட்டுக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனமாக எடுத்துக்கொண்டு கோவில் சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது என்பன உள்ளிட்ட விபரங்களை குழு அமைத்து தமிழக முதல்வர் விரைவாக அறிக்கை கொடுக்க வேண்டும்.
அறநிலையத்துறை கோவில்களையும், கோவில் சொத்துகளையும் காப்பற்றாவில்லை என்றும்,10ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இடிபாடுடன் பூஜைகள் செய்யாமல் உள்ளது என்றார்.
மேலும்,உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கவனமாக எடுத்துக்கொண்டு,கோவில் சொத்துக்கள் யார் பெயரில் உள்ளது, என்பன உள்ளிட்ட விபரங்களை குழு அமைத்து தமிழக முதல்வர் விரைவாக அறிக்கை கொடுக்க வேண்டும்.
கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்தால், நேரடியாக மீட்கவும், அதில் தடை உத்தரவும் பெற முடியாது என இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இடமுண்டு.ஆனால் இந்து அறம் அழிக்கின்ற துறையாக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுகிறது.
தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை மறுப்பவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள்” என்று கூறினார்.