• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடீசியா சங்கம் சார்பில் 18 வது இண்டெக்ஸ் கண்காட்சி ஜூலை 13ல் துவக்கம்

July 7, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சங்கமான கொடீசியா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இண்டெக்ஸ் என்ற பெயரிலான விவசாய தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டிற்கான 18 வது இண்டெக்ஸ் கண்காட்சி வருகிற 13ம் தேதி முதல் 17 ம் தேதி வரை கோவை கொடீசியா அரங்கில் நடைபெறவுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி,

விவசாய துறை பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் இக்கண்காட்சி சிறு,குறு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.இயந்திரம் சார்ந்த துறையாக விவசாய தொழிலை மாற்ற வேண்டிய தருணம் இது.இக்கண்காட்சியில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து கொடீசியா தலைவர் ராமமூர்த்தி கூறுகையில்,

கடந்தாண்டு இக்கண்காட்சியில் 60கோடி ரூபாய் அளவிற்கு நேரடி வர்த்தகமும்,100 கோடி ரூபாய் அளவிற்கு தொழில் விசாரணைகளும் வந்தது.இவ்வாண்டு 80 கோடி ரூபாய் அளவிற்கு நேரடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் இக்கண்காட்சி மூலம் விவசாயிகள் பலனடைவதோடு கோவை மாவட்டத்தில் உள்ள சிறு குறு தொழிற்சாலைகளும் தொழில் வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும்,இக்கண்காட்சியில் வேளாண்,மீன்வளத்துறை,கால்நடைகள் பல்கலைகழகங்களை சேர்ந்த அதிகாரிகள் விளக்கங்கள் அளிக்க உள்ளனர்.பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த பால் பண்ணை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள்,நாட்டின் பல்வேறு மாநிலங்கள் உட்பட சீனா,ஜெர்மனி உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் 2 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடி பரப்பிலான கண்காட்சியில் அரங்குகளை அமைக்க உள்ளனர்.

நுழைவு கட்டணமாக 30 ரூபாய் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட உள்ளது.மண்ணில்லா விவசாயம்,ஒருங்கிணைந்த பால் பண்ணை,மாடி தோட்டம்,இயற்கை வேளாண்மை உள்ளிட்டவை குறித்து நேரடி பயிற்சி அளிக்கும் அரங்குகளும்,குதிரை,ஆடு,கோழி,மீன் பண்ணைகள் அமைப்பது தொடர்பான விளக்க அரங்குகள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க