• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொடீசியாவில் ராணுவ புத்தாக்கம் மையம் துவக்கம்

October 29, 2020 தண்டோரா குழு

கொடீசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையம் துவக்கம் மற்றும் இரு இராணுவப்படைகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கெயெழுத்துடும் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கலையரங்கத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் மங்கேற்ற இந்திய அரசின் பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமார் அடல் தொழில் மையத்தை துவக்கி வைத்தார்.

இந்த மையம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, ஒரு தொழில் அமைப்பு மூலமாக துவங்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மையமாகும். தென்னக ராணுவத் தளவாட தொழில் வழித்தடத்திற்கு பங்களிப்பை வழங்குவதில் இந்த மையம் முக்கிய பங்காற்றி வருகிறது.பாரத பிரதமரின் “ஆத்ம நிர்பார் பாரத்” அழைப்பின்படி ராணுவத் தளவாட உற்பத்திப்
பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக இந்த மையம் செயல்பட உள்ளது. இது தனது செயல்பாடுகளைத் தொடங்கும் விதமாக கொச்சியிலுள்ள நேவல் ஷிப் ரிப்பேர் யார்டு கோவை சூலூரில் அமைந்துள்ள 5 பி.ஆர்.டி, இந்திய விமான படை
ஆகிய அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டுள்ளது்.

இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய அரசின் பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய்குமார்,இங்கு உற்பத்தி செய்யப்பட்டும் பொருட்கள் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களை விட செலவு மிக்குறைவாக இருக்க வேண்டும் என்றும் பொறியியல் முடித்த மாணவர்கள் அடல் தொழில்வளர்ப்பு மையத்தில் பங்கேற்று புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராம்மூர்த்தி, இந்த மையத்தில் சேர ஐம்பதிலிருந்து நூறு தொழில்நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், முன்னதாக இதன் மூலம் சிறுகுறு தொழில்நிறுவனஙலகள் நேரடியாக பலனடையும் என்றும் நல்ல வரும் ஐந்தாண்டுகளில் இன்னும் இரட்டிபாக தொழில் வளர்ச்சி அடையும் என்றார்.மேலும் பாதுப்புத்துறை செயலர் கூறியது போல 20 சதவீதம் குறைந்த விலையில் உதிரிபாகங்கள் செய்ய தாங்கள் ஆராய்ந்துள்ளதாகவும், நல்ல அனுபவத்துடன் உலகதரத்தில். உதிரிபாகங்கள் செய்யும் போது அவற்றை ஏற்றுமதியும் செய்ய முடியும் என்றார்.மேலும் மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான சக்தியாக இந்த மையம் செயல்படும் என்றும் அப்போது அவர் தெரிவத்தார்.

மேலும் படிக்க