• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடிசியா வளாகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவு திறப்பு !

May 31, 2021 தண்டோரா குழு

கோவை கொடிசியா வளாகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவை திறந்து வைத்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட 15 மருத்துவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமன ஆணைகளை வழங்கினார்.

கோவை கொடிசியா வளாகத்தில் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு அலோபதி மற்றும் சித்த மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.4 அரங்குகளில் 1286 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 400 படுக்கைகளுக்கு கான்சன்ட்ரேட்டர்கள் மூலம் ஆக்சிஜன் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கொடிசியா வளாகத்தில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் கேட்டறிந்தார். கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஒப்பந்த அடிப்படையில் 75 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 15 மருத்துவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி ஆணையையும் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

மேலும் படிக்க