July 1, 2020
தண்டோரா குழு
கோவை கொடிசியா வளாகத்தில் முதற்கட்டமாக 400 படுக்கை வசதிகளுடன் பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.இதில் 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 337 பேர் சிகிச்சையில்
உள்ளனர்.
இந்நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் முதற்கட்டமாக 400 படுக்கை வசதிகளுடன் பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் தயாராகி வருவதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கோவை கொடிசியா வளாகத்தில் முதற்கட்டமாக 400 படுக்கை வசதிகளுடன் #COVID19 பிரத்தியேக சிகிச்சை மையம் தயாராகி வருகிறது.
இங்கு கொரோனா அறிகுறியுடன் பெரியளவில் பாதிப்பு இல்லாமல் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவர்.இங்கு கொரோனா அறிகுறியுடன் பெரியளவில் பாதிப்பு இல்லாமல் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவர்.
அறிகுறியுடன் பாதிப்புள்ளவர்களுக்கு மட்டும் இனி வரும் நாட்களில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா சிகிச்சைக்கென மொத்தம் 17 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைப்பதற்கான அனைத்து பணிகளும் கோவையில் நடைபெற்று வருகின்றன.கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சுகாதார மையங்கள், மாநகராட்சி கட்டிடங்கள், தனியார் மையங்கள், கல்வி நிறுவனங்கள் என படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.