• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொடிசியா டெக்னாலாஜியின் சப்கான் எட்டாவது பதிப்பு கண்காட்சி

May 6, 2023 தண்டோரா குழு

சிறு குறு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும்,சப்கான் 2023 கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் மே மாதம் 10 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.கோவை கொடிசியா இன்டெக் டெக்னாலஜியின் , 8வது பதிப்பாக நடைபெற உள்ள இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில்,கொடிசியா தலைவர் திருஞானம், மற்றும், சப்கான் 2023, கண்காட்சியின் தலைவர் சஞ்சீவிகுமார், ஆகியோர் பேசினர். இந்தியாவின் முதன்மையான கண்காட்சிகளில் ஒன்றாக சப்கான் இருப்பதாகவும், கொடிசியா இன்டெக் டெக்னாலஜி, சார்பாக , எட்டாவது பதிப்பாக மே 10 தேதி துவங்கி, பன்னிரண்டாம் தேதி வரை, நடைபெற உள்ள இந்த கண்காட்சியை, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆய்வக இயக்குனர் டாக்டர் ஸ்ரீநிவாச மூர்த்தி துவக்கி வைக்க இருப்பதாகவும், இந்த கண்காட்சியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்த மற்றும் பதிவு செய்திடாத சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தி மற்றும் தொழிலை பொருளாதார வளர்ச்சியில், ல்ம்படுத்த இக்கண்காட்சி பெரிதும் உதவ உள்ளது எனவும், இப்பகுதியில் உள்ள தொழில் முனைவோர்கள் சுமார் 20 முதல் 30 ஆண்டுகால தொழில் அனுபவம் பெற்றவர்கள், தாங்கள் சார்ந்துள்ள உற்பத்தி துறை குறித்து பட்டறிவும், புரிதலும் இங்கு கிடைக்க உள்ளது.எனவும், இந்த கண்காட்சியில் 15 பொதுத்துறை நிறுவனங்கள், 17 பெரும் தனியார் தொழிற்சாலைகள், ஒரு வங்கி, உள்ளிட்ட 214 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும், தேவையான தகுதி உள்ள சிறு தொழிற்சாலைகளை தேர்ந்தெடுக்க உள்ளது, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் தங்களது ஆர்டர்களை பெறுவதற்கு தங்களின் உற்பத்திகளை, இங்கு காட்சிப்படுத்த உள்ளது எனவும், சிறு குறு நிறுவனங்கள், நிதி சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்க வங்கி நிறுவனம் உதவும் வகையில், இந்த கண்காட்சி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க