June 21, 2021
தண்டோரா குழு
உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சமீரன் அந்த பணிகளை நேரில் பார்வையிட்டார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ குழுவினருடன் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், அனைவரிடமும் கொரோனா சிகிச்சை மையத்தில் குறைகள் ஏதாவது உள்ளதா என கேட்டறிந்தார்.