June 25, 2021
தண்டோரா குழு
கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் ரூ5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இஎஸ்ஐ கொரோனா வார்டுகளுக்கு வழங்க டீன் ரவீந்திரனிடம் வழங்கப்பட்டது.
கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவமனைகளுக்கு சமூக தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.இதேபோல், கோவை கொங்கு நண்பர்கள் சார்பில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டிற்கு, ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் 20 வீல் சேர், 20 ஸ்டெச்சர் ஆகியவற்றை, இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரனிடம், கொங்கு நண்பர்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் கேபி.அழகேசன், இணைச்செயலாளர் லோகநாதன், நிர்வாக்குழு உறுப்பினர்கள் நடராஜன், நக்கீரன் ஆகியோர் வழங்கினர்.
இந்த அமைப்பு சார்பில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையின் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.