• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்13ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

February 15, 2020

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1389 மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டங்களை வழங்கினார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது அமைந்துள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 13ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 1077 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்களும்,312 மாணவர்களுக்கு முதுகலை பட்டங்களும் வழங்கபட்டது..

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் காளிராஜ் 13898 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பின் பேசிய அவர் மாணவ மாணவிகள் தற்போது தான் நம்பிக்கை உள்ள வாழ்க்கையை தொடங்கி உள்ளீர்கள் என்றும்,இந்த பட்டத்தின் மூலம் நீங்களே வேலைவாய்ப்பிணை ஏற்படுத்திகொண்டு தொழில்கலை தொடங்கி பின் வரும் மாணவர்களுக்கு வேலைவைப்பினை அளித்து முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

மாணவர்களுக்கு இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் இயக்குனர் வாசுகி,முதல்வர் லக்ஷ்மணசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க