• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா

July 19, 2024 தண்டோரா குழு

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் திறப்பு விழா டாக்டர் பிரசாந்த் ஐபிஎஸ் அவர்களுக்கு பாராட்டு விழா இன்று (19-ந் தேதி)நடைபெற்றது.

விழாவிற்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குனருமான டாக்டர் சி ஏ வாசுகி தலைமை தாங்கிபேசினார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் வி.சங்கீதா வரவேற்று பேசினார்

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப்பை திறந்து வைத்துஐபிஎஸ் அதிகாரி டாக்டர் பிரசாந்த் அவர்களை பாராட்டி விருது வழங்கி பேசினார்.

அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

உறுதி விடாமுயற்சி கடும் உழைப்பு மூன்றும் இருந்தால் சிவில் சர்வீஸ் துறையில் வெற்றி நிச்சயம் அது மட்டுமல்ல எந்த துறையை தேர்வு செய்தாலும் வெற்றி பெற முடியும்ஒரு மனிதனுக்கு முடிவு எடுக்கும் ஒரு திறனை ஆண்டவன் நமக்கு கொடுத்துள்ளார் அந்த முடிவை எடுப்பது உங்களுக்கு கையில் உள்ளதுகொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப்உங்களுக்கு சரியான பிளாட்பாரம் ஆகும் இதை நீங்கள்சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்சிவில் சர்வீஸ் துறையில் மட்டும்தான் பொதுமக்களை நேரடியாகசந்தித்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் மற்ற துறைகளில் அது மிகவும் குறைவு

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

விழாவில் கல்லூரியின் முதல்வர் வி.சங்கீதா ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பி.சுஜாதா டாக்டர் ஆர்.சுமதி டாக்டர்
ஆர்.சரவணன் மூர்த்தி உள்பட பலர்
கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க