• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கே.சி.டபிள்யூ. கல்லூரியில் 2023 கல்வி ஆண்டு கல்லூரி தின விழா

April 5, 2023 தண்டோரா குழு

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி தின விழாவில் கலந்து கொண்ட அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை கே.சி.டபிள்யூ. கல்லூரியில் 2023 கல்வி ஆண்டு கல்லூரி தின விழா நடைபெற்றது.கல்லூரி நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி செயலர் முனைவர் யசோதா முன்னிலை வகித்தார்.முதல்வர் மீனா அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சாதனை மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,.

கிருஷ்ணம்மாள் கல்லூரியின் பல்வேறு சாதனைகளை பட்டியிலிட்டு கூறிய அவர்,இந்த கல்லூரி பெண் கல்வியை போற்றும் விதமாகவே துவங்கப்பட்டதாக கூறிய அவர்,ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண் கல்வி முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.நல்ல சமுதாயத்தை உருவாக்கிடவும் பெண் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்திய அவர்,கற்பதை கல்லூரியோடு நிறுத்தாமல் தொடர்ந்து கற்று கொண்டே இருப்பது அவசியம் என்றார்.

தொடர்ந்து விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்த கல்லூரி மாணவியர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியைகள் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க